ஏறுது பார் கொடி ஏறுது பார்
ஏறுது பார் கொடி ஏறுது பார் - இங்கு
ஏறுது பார் கொடி ஏறுது - தமிழ்
ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி - எட்டுத்
திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி -புலி
காட்டிய பாதையில் சென்ற கொடி (ஏறுதுபார்)
செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே
சீறிடும் கொடியிது - தமிழ்
மக்களைக் காத்த நம்மான மாவீரரை
வாழ்த்திடும் கொடியிது - புலி வீரத்தின் கொடியிது
மாவீரரின் கொடியிது (ஏறுதுபார்)
எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது – பெரும்
சத்திய வேள்வியில் செத்தவர் மீதினிலே
சாற்றிய கொடியிது -தமிழ்
ஈழத்தின் கொடியிது - புலி
ஏந்திய கொடியிது (ஏறுதுபார்)
சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய
சாதனைக் கொடியிது - சங்கு
ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும்
உலவிய கொடியிது சம
தர்மத்தின் கொடியிது - எங்கள்
தாயவள் கொடியிது (ஏறுதுபார்)
ஆயிரமாயிரம் பேரென வேங்கைகள்
ஆக்கிய கொடியிது - பிரபாகரன்
என்றிடும் காவிய நாயகன் போற்றிடும் கொடியிது - தமிழ்
தேசத்தின் கொடியிது - எங்கள் தேசியக் கொடியிது (ஏறுதுபார்)