Canadian National Anthem in Tamil - கனடிய தேசிய கீதம்
ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!
உந்தன் மைந்தர்கள்
உண்மைத் தேச பக்தர்கள்!
நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்
நீ எழில் கண்டு வைப்போம்!
எங்கும் உள்ள நாம், ஓ கனடா
நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!
எம்நிலப் புகழைச் சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக!
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி
அணிவகுத்தோம்!
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி
அணிவகுத்தோம்!